ஒவ்வொரு ஆண்டும் முப்பதாம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அரசு சார்பிலும் பசும்பொன் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் பல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு தொடங்கி ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை கொண்டு இருப்பதால் நாளை மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் சுற்றுலா சாலை வழியாக பசும்பொன்னுக்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.