Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பாரம்பரிய திருவிழா… மக்கள் உற்சாகம்…!!

மதுரை மாவட்டம்  நடந்த பாரம்பரியமான வெற்றிலை பிரி திருவிழாவில், திரளான  மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர்அருகே வெள்ளலூரில் நடந்த பாரம்பரியம் மிக்க வெற்றிலை பிரி திருவிழாவில், ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். வருடந்தோறும்  சித்திரை மாதம் முதல் நாளில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடந்த  திருவிழாவில், ஊர் மக்களின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள கட்டுகளில் உள்ள வெற்றிலைகள் பிரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த விழாவில் வெற்றிலைகளை பெறும் விவசாயிகள், தங்களின் நிலங்களில் வைத்து வணங்கி, ஏர் உழவு உள்ளிட்ட பணிகளை துவங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.வெற்றிலை பிரி விழாவால் , தங்கள் பகுதியில் விவசாயம் செழிக்கும் என்று விழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் தெரிவிவித்தனர்.

Categories

Tech |