Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு!

ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக நேற்று மட்டும் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்., 14ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில், ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அனைத்து ரேஷன் கடை தாரர்களுக்கும் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது.

கடன்களுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டி உள்ளிட்டவை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட சலுகைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |