சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு டிராக்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள மரவனூர் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் டிராக்டர் இறங்கியது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரானது அப்பகுதியில் இருந்த இரு கடைகளின் முன்புறம் மோதியதோடு கணபதி என்பவரின் டீக்கடை சுவர்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்துவிட்டது.
இந்த விபத்தினால் பெட்டிகடை மற்றும் டீ கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் விபத்தானது நள்ளிரவு பொழுதில் நடைபெற்றதால் உயிர்ச்சேதம் இல்லாமல் பொதுமக்கள் தப்பித்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.