அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இனிமேல் 21 வயது நிரம்பியவர்கள் தான் துப்பாக்கி வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் 18 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், சட்டமியற்றுபவர்களிடம் கைத்துப்பாக்கிக்கான சட்டங்களை கடுமையாக மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது நியூயார்க் நகரின் ஆளுநர் இந்த சட்டங்களின் தொகுப்பிற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். எனவே, துப்பாக்கி வாங்குவதற்கு இருந்த வயது வரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது துப்பாக்கி வாங்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த வயது வரம்பு 21-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.