Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… பறந்து வந்த மேற்கூரை… சூறைக்காற்றின் விளைவு…!!

அரசுப் பள்ளியின் மேற்கூரை பலத்த காற்றினால் பறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்த இரும்பு தகரத்தால் ஆன மேற்கூரை காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டது.

அப்போது அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பறந்து வந்த மேற்கூரை அங்கிருந்த மின்கம்பி மீது விழுந்து விட்டது. இதனால் மின் கம்பி அறுந்து அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மின் இணைப்பைத் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |