அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய்க்கு சேவை விருது வழங்கி அதிகாரிகள் கவுரவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சான் டியேகோ நகரத்தில் இருக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் தரம் பிரிக்கக்கூடிய அலுவலகத்தில் போடர் என்ற நாயை பயன்படுத்தி வந்தனர். அளவுக்கு அதிகமாக இருக்கும் பூச்சிக்கொல்லி உபயோகம், தரம் குறைவான பயிர்கள், பூச்சி தாக்கிய விளைபொருட்கள் போன்றவற்றை கண்டறிவதற்கும் அடையாளம் காண்பதற்காகவும் இந்த நாய் பயன்படுத்தப்பட்டது.
இந்த போடர் தன் நான்கு வருட கால பணியில் 426 சம்பவங்களை சிறப்பாக செய்திருக்கிறது. இந்நிலையில், தற்போது உடல் நலம் பாதித்த போடருக்கு அதிகாரிகள் ஓய்வு கொடுக்க தீர்மானித்தனர். இதைத்தொடர்ந்து அந்த நாய்க்கு சிறப்பான முறையில் அதிகாரிகள் பிரியாவிடை கொடுத்தனர்.
மேலும், அதன் நான்கு வருட துப்பறிவு பணிக்கு மரியாதை செலுத்துவதற்காக சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது.