உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கூறினார் .
தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி , சூலூர் மற்றும் திருபரம்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம்தேதி நடைபெறுகின்றது. இதற்காக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமற்ற தொகுதிக்குட்பட்ட வெஞ்சமாங்கூடலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட்டு இங்குள்ள மக்களுக்கு நிலையாக தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வோம். இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.