பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா குறித்த நினைவலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டவர் எம்எஸ் தோனி. நேற்றைய தினம் அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாத துயரமாக, அதை தொடர்ந்து, அவருடன் பல போட்டிகளில் விளையாடிய, அவரது நெருக்கமான நண்பனான சுரேஷ் ரெய்னா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர்கள் இருவரது முடிவும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் தோனி மற்றும் ரெய்னா ஆகியோரது விளையாட்டு நினைவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா குறித்த ஒரு நினைவை பின்வருமாறு காணலாம். பொதுவாக ரெய்னாவின் பேட்டிங்கை விட பில்டிங் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று என சொல்லலாம்.
அதற்கு சிறந்த உதாரணம், கிரிக்கெட்டின் திறமையான பில்டராக புகழப்படும் ஜான்டி ரோட்ஸ் வெளியிட்ட உலகின் டாப் 5 பில்டர்கள் லிஸ்டில் ரெய்னா முதலிடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக, தோனியின் வளர்ப்பு தப்பாகுமா என்பது உள்ளிட்ட வசனங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.