கொண்டே ட்ராவலர் என்பது ஒரு சுற்றுலா இதழ் ஆகும். இந்த இதழ் தம்முடைய வாசகர்கள் தேர்வு செய்த சுற்றுலா சொல்வதற்கு ஏற்ற சிறந்த நாடுகள் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இலங்கை 17 வது இடத்தை பிடித்துள்ளது. இதில் அந்நாடு 88.01 புள்ளிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கடந்த வருடம் இலங்கை இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்ததுள்ளது. மேலும் சுற்றுலாவை ஆதாரமாக க் கொண்டு வருவாய் ஈட்டி வரும் இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீளுவதற்கு சுற்றுலா துறையை மீண்டும் புத்துயிர் ஊட்டும் முயற்சியை எடுத்து வருகின்றது. இந்த வருடத்திற்கான சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.