உலக அளவில் பல கோடி மக்களால் youtube பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வீடியோ தளங்களில் யூடியூப் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பிறகு youtube மூலம் பல படங்கள் நல்ல விளம்பரங்களை தேடிக் கொள்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிக பிரபலமான பாடல்கள் குறித்த விவரத்தை youtube வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
அதன் பிறகு புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் முதலிடத்தையும், சாமி சாமி பாடல் 3-ம் இடத்தையும், புஷ்பா ஹிந்தி படத்தின் ஓ போலேகா, ஓபோலேகா பாடல் 6-ம் இடத்தையும், புஷ்பா தெலுங்கு படத்தின் ஓ அன்டவா பாடல் 7-ம் இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் youtube வெளியிட்ட டாப் 10 பாடல்கள் லிஸ்டில் தென்னிந்திய பாடல்களே 6 இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.