தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருகிறது. இதில் எல்லா படமும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களை கவர்ந்து மனதில் என்றென்றும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு திரையில் ரிலீஸ் ஆகும் சிறிய பட்ஜெட் படம் கூட திடீரென மக்களை கவர்ந்து பெரிய அளவில் ஹிட்டாகிவிடும். குறிப்பாக லவ் டுடே திரைப் படமானது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருவதோடு, பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் அதிக வசூல் புரிந்த திரைப்படங்களின் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முதலிடத்தில் பொன்னியின் செல்வன் இருக்கிறது. இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. அதன் பிறகு 400 கோடி வசூலைக் கடந்து 2-ம் இடத்தில் விக்ரம் திரைப்படமும், ரூ. 236 கோடி வசூல் புரிந்த பீஸ்ட் திரைப்படம் 3-வது இடத்திலும், ரூ. 200 கோடி வசூலித்த வலிமை திரைப்படம் 4-வது இடத்திலும், ரூ. 179 கோடி வசூலித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 5-வது இடத்திலும் இருக்கிறது.
இதனையடுத்து ரூ. 110 கோடி வசூலித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 6-வது இடத்திலும், ரூ. 100 கோடி வசூலித்த சர்தார் திரைப்படம் 7-வது இடத்திலும், ரூ. 70 கோடிக்கும் மேல் வசூலித்த லவ் டுடே திரைப்படம் 8-வது இடத்திலும், ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்த வெந்து தணிந்தது காடு 9-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் ரூ. 60 கோடி வரை வசூலித்த விருமன் திரைப்படம் 10-வது இடத்தில் இருக்கிறது.