நாளை காதலர் தினத்தை முன்னிட்டு இதுவரை 50 லட்சம் ரோஜா மலர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து காதலர்கள் தங்களுடைய காதலருடன் நல்ல முறையில் கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு காதலர்கள் ரோஜா மலர்களை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் இதுவரை 50 லட்சம் ரோஜா மலர்கள் பல்வேறு கடைகளில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 லட்சம் ரோஜா மலர்கள் விற்பனையாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். காதலர் தினத்தில் ரோஜா விற்பனை செய்வதில் டெல்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.