கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த 9 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளோம். தேவைப்படும் போது பணிக்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் சமுதாயத்திற்குள் கொரோனா நோய் தோற்று ஏற்படவில்லை.
பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியும் மக்கள் அஜாக்கிரதையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். கொரோனா சிறப்பு வார்டுகளில் படுக்கை வசதிகளை 3 மடங்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை நமக்காக ஒரு நாள் அதை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சுய ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது என மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.