கமலஹாசன் இளைஞர்கள் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச உலக இளைஞர் தினம். இந்த நன்னாளில் இளைஞர்களின் சிறப்பு குறித்தும், இளைஞர்களால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் கமலஹாசன் இளைஞர்கள் தினம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
நாளையின் முன்அறிவிப்பாளர்கள். மூதறிஞர்கள், முன்னோடிகள் இளைஞர்கள் தான். அவர்கள் அறிவு பசியோடும், கேள்விகளோடும் திளைத்திருக்க இளைஞர்கள் தின வாழ்த்துக்கள். மாற்றத்திற்கான விதை இளைஞர்கள்தான். “நாளை நமதே” என ட்விட் செய்துள்ளார்.