Categories
உலக செய்திகள்

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி…. அகற்றப்பட்ட சின்னம்…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

ஓடேப்பா மெரன் பூங்காவில் ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்டமான ஒலிம்பிக் வளையங்களை அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் டோக்கியோ என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டியானது தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துள்ளது. இது டோக்கியோவில் நடைபெற்றுள்ள 32 வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலின் அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

மேலும் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த சீனா தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து டோக்கியோவில் உள்ள ஓடேப்பா மெரன் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் சின்னமானது 15 மீட்டர் நீளமும், 32 மீட்டர் அகலமும், 1.7 மீட்டர் தடிமனும் கொண்டதாகும். இந்த பிரம்மாண்டமான ஒலிம்பிக் சின்னத்தை  ஜப்பான் நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். இதுக்குறித்து ஜப்பான் நாட்டு அதிகாரிகள் கூறுவதாவது “இந்த ஒலிம்பிக் சின்னத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று மோசமான வானிலையின் காரணமாக அந்த பணி ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை அன்று ஒலிம்பிக் வளையங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது” என கூறியுள்ளனர்.

Categories

Tech |