ஒலிம்பிக் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 32 வது ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10,000 பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியை காண வரும் ரசிகர்கள் மது அருந்தக்கூடாது, போட்டியில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகளிடம் ஆட்டோகிராஃப் பெறுவதற்கு அனுமதி மறுப்பு , கூட்டம் சேரக்கூடாது , கட்டித் தழுவ கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.