Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண …. 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி …!!!

32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டியை நேரில் காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர்  ரசிகர்களுக்கு போட்டியை நேரில் காண அனுமதி வழங்குவது குறித்து நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண உள்ளூர் ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து நேற்று காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் போட்டி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியை காண உள்ளூர்  ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போட்டி அமைப்பு குழு தலைவரான செய்கோ ஹஷிமோட்டோ கூறும்போது,”  இந்த ஒலிம்பிக் போட்டியை நேரில் காண 10 ஆயிரம்  ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன் போட்டியை காண வரும் ரசிகர்கள் முக கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியை  பின்பற்ற வேண்டும் ‘ என்று அவர் கூறினார் .இதையடுத்து பிரதமர் யோஷிஹிடே சுகா கூறுகையில்,”ஒருவேளை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒலிம்பிக் போட்டியை பாதுகாப்புடன்  நடைபெறுவதற்கு ரசிகர்களுக்கு தடை விதிக்க தயங்கமாட்டோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |