ஒலிம்பிக் போட்டியானது இந்த ஆண்டு திட்டமிட்டபடி, கட்டாயம் நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகின்றது. இதனால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவரும் , ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவரான ஜான் கோயட்ஸ் கூறியுள்ளார் .
அதில் , தற்போது உள்ள சூழலில் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்கப்படவோ அல்லது ரத்து செய்வதற்கான வாய்ப்பே கிடையாது ,என்று திட்டவட்டமாகக் கூறினார். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது ,அனைத்து விதமான தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை மேற்கொண்டு, ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். அதோடு கொரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் , இங்கு தடுப்பூசி தேவை இருக்காது என்றும், அவர் கணித்து கூறியுள்ளார். எனவே ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி கட்டாயம் நடக்கும் என்று அவர் கூறினார்.