Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…இந்திய வீரர்-வீராங்கனைகள்..! 6 பேர் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு , இந்தியாவிலிருந்து ஆறு வீரர்-வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்  .

கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா  தொற்று காரணமாக, ஜப்பானில் நடைபெற  இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  நடக்கவில்லை . ஆனால் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மல்யுத்தப் போட்டியில் ,இந்திய அணி வீரர்-வீராங்கனைகளான  ரவி தாகியா (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ) ஆகியோர் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு,தகுதி பெற்றுள்ளனர்.மேலும் நடக்கவிருக்கும் தகுதி சுற்று போட்டிகளில் ,இந்திய வீரர்கள் பலர் ஒலிம்பிக் போட்டிக்கு,தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |