Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : இந்திய துப்பாக்கி சுடுதல் அணி …. குரோஷியாவிற்கு பயணம் …!!!

பயிற்சிகள் மற்றும் போட்டியில் பங்கு பெறுவதற்காக  இந்திய துப்பாக்கி சுடுதல்அணியின் வீரர்-வீராங்கனைகள்,பயிற்சியாளர்கள் ஆகியோர் ,தனி விமானதில் குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற, 15 இந்திய வீரர்-வீராங்கனைகளில்  சவுரப் சவுத்ரி, இளவேனில்,அஞ்சும் மோட்ஜில், அபிஷேக் வர்மா , மானு பாகெர், ராஹி சர்னோபாத் உட்பட 13  பேர், 7 பயிற்சியாளர்களும் மற்றும் 6 உதவி ஊழியர்களும் ,நேற்று தனி விமானம் மூலமாக டெல்லியிலிருந்து, குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். தலைநகர் சாகிரெப்பில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் , ஆசிஜெக் நகரில் வரும் 20ம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐரோப்பிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும், இதைத்தொடர்ந்து ஜூன் 22ம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதன்பிறகு ஜூன் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டியில் இறுதி கட்டமாக பங்கேற்க உள்ளனர். இதனால் 2½  மாதம்  குரோஷியாவில் தங்கி ,இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, இந்திய துப்பாக்கி சுடுதல்  அணியின் குரோஷியா பயணத்திற்கு, டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு அனைவரும் பத்திரமாக பயணம் செய்யுங்கள் என்றும் அந்த நாடுகளின்கொரோனா  தடுப்பு பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, பயிற்சியில் கவனம் செலுத்துங்கள் என்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளுங்கள் . அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |