Categories
Uncategorized மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும்!!

மதுபானம் வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், மதுபானங்களை வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாகவும், அதேநேரத்தில் மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு 7 வண்ண டோக்கன்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகார பூர்வ அரசாணையும் வெளியிடப்பட உள்ளது.

Categories

Tech |