Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் 7 மணி நேரம்…. “சிறுத்தையுடன் போராடிய நாய்”… பின்னர் நடந்த சம்பவம்…!!

கர்நாடக மாவட்டத்தில் உள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணி அளவில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க அந்த நாய் ஒரு வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது.  பின்னாடியே வந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சென்றது. பின்னர் கழிவறைக்கு அந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே புலியின் வால் இருப்பதை கண்டு பயந்து, அதன் கழிவறையின் கதவை அடைத்துவிட்டு கூச்சல் போட்டனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

காலை 8:45 மணிக்கு  சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். இதனால் முதலில் கழிவறையின் மேல் கூரையை முதலில் அகற்றினர். பின்னர் சுற்றி வலை போடப்பட்டது. தங்கள் நடவடிக்கையால் கோபமடைந்த சிறுத்தை நாயை  ஒன்றும் செய்து விடக்கூடாது, என்பதற்காக மிகவும் கவனமாக கையாண்டனர். அதுமட்டுமில்லாமல் கழிவறைக்குள் மாட்டிக்கொண்டதால் சிறுத்தையும் பயந்து போய் இருந்தது.

இதனால் நாயை சிறுத்தை தாக்க முற்படவில்லை. அறையின் ஒரு மூலையில் நாயும், மற்றொரு முறையில் சிறுத்தையும் படுத்துக்கொண்டது. பின்னர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மீதேறி வனத்துறை அதிகாரிகள் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டனர். அந்த தருணத்தில் துல்லிய சிறுத்தை வலையில் சிக்கிக் கொண்டது. பிறகு மதியம் 2 மணி அளவில் மீட்ட அதிகாரிகள் காட்டில் விட்டனர். நாயும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

Categories

Tech |