மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை இதமாக வழிநடத்துங்கள். சுற்றுச்சூழலினால் தூக்கம் கொஞ்சம் பாதிக்கும், டென்ஷன் வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படும். தொழில் பிரச்சினை ,குடும்ப பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகி செல்லும்.
எதிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும் .பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும் படியான சூழ்நிலை ஏற்படும் கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள் .இன்று வெளிஊர் பயணம் மேற்கொள்வீர்கள் .வெளிஊர் சுற்றுலாக்கு சென்று வருவீர்கள் .
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல்இன்று லட்சுமி வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்ன தானமாக கொடுங்கள் .உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ப்ப தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீலம்
ரிஷப ராசி அன்பர்களே …!!!!இன்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியம் .தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம் ,பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணியை பார்ப்பது நல்லது. எதிர்பாராத சில இட மாற்றங்கள் பற்றிய தகவல் வரக்கூடும்.
இன்று வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள் .இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் நிச்சயம் இருக்கின்றன. இன்று தனவரவுக்கு எந்த குறையும் இல்லை ,ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்
மிதுனம் ராசி அன்பர்களே …!!இன்று செயலில் மதி நுட்பதிறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம்பெறும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று அனைத்து விஷயத்திலும் அணுகுலம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பயணங்கள்கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். எதை பத்தியும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருங்கள். இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் ஓரளவு வெற்றியை கொடுக்கும்.
சிறப்பான முறையில் முன்னேற்றம் காணப்படுவீர்கள் .பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் ஏற்பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. அதனால் கவலை வேண்டாம், மன தைரியம் பிறக்கும் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள் .சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படும் அதை நீங்கள் கொஞ்சம் கவனமாகவே பார்த்துக்கொள்ளுங்கள். என்று ஆதாயம் ஓரளவு சிறப்பாக இருக்கும் .வெளிஊர் பயணத்தின்போது செலவு கொஞ்சம் அதிகரிக்கும்.
தேவையில்லாத பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்க வேண்டாம் .இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அது மட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ப்ப தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிரஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
கடகம் ராசி அன்பர்களே …!!!இன்று சொந்தங்களில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி கொஞ்சம் உருவாகலாம். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பு தேவை. ,ஒவ்வாத உணவுகளை தயவு செய்து கொள்ள வேண்டாம். அரசு உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதம் இருக்கும் .இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.
சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை இருக்கும். சக ஊழியரிடம் கவனமாக பேசுங்கள். வெளிநாட்டு பயண வாய்ப்பு இன்று கிடைக்கக் கூடும். சில கலைத் துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமையும் அதிகமாகும். இன்று பயணம் மேற்கொள்வதால் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள் .வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
ஓரளவு பண வரவையும் மனம் நிம்மதி குறிப்பிடும். ஏதும் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்ன தானமாக கொடுங்கள் .உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் :7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் மஞ்சள்
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று எவரிடமும் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பொருட்களை யாரிடமும் இரவலாக வாங்க வேண்டாம். பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று வேலையில் இழுபறி வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும் கவனமாக இருங்கள். எல்ல நன்மைகளும் ஓரளவு வந்து சேரும், காரியத்தில் வெற்றி இருக்கும், எதிர்ப்புகள் விலகி செல்லும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு பின்னர் நீங்கும்.
தேவையற்ற மனக்கவலை கொஞ்சம் இருக்கும் அதை மட்டும் பார்த்துக்கோங்க. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். கூடுமானவரை இன்று கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள் யாரிடமும் பணத்தை கடனாகப் பெறாதீர்கள், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்றய நாள் முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இடத்தை தானஇன்று லட்சுமி வழிபாட்டை செய்து 7 பேருக்கு தயிர்சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீலம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர் உங்கள் மேல் அதிகம் பாசம் கொள்வார்கள். பணியில் தடைகள் அகலும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனை முன்னேற்றகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி கொடுப்பதாகவே இருக்கும்.
உறவினரிடம் கொஞ்சம் பக்குவமாக பேசுங்கள், வழக்குகளில் இன்று மெத்தனமான போக்குதான் இருக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்துகொள்வீர்கள். பெண்களுக்கு பண வரவு திருப்தியை கொடுக்கும். கலை துறையினருக்கு பேச்சு இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் சிறப்பகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகக் கொடுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களும் கர்ம தோஷங்களும் நீங்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று செய்யும் செயல்களில் தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்ற வேண்டும். உணவில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் சாதகமான நிலை காணப்படும். தான தர்மத்தில் இன்று நீங்கள் ஈடுபடுவீர்கள்.
ஆன்மீக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்லலாம், பயணத்தின் பொழுது கவனம் இருக்கட்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று குறிக்கோள் அற்ற வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். தைரியம் கூடும். இன்று எந்த உத்திரவாதமும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளாமல் இருங்கள் அது போதும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள், வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தில் தடைப்பட்டு பின்னர் நல்லபடியாக நடத்தி முடிப்பீர்கள். மனதில் எதையாவது நினைத்து கொண்டு இருப்பீர்கள். இன்று ஓரளவு சீரான போக்கு காணப்படும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது முயற்சிகளின் பேரில் தான் வெற்றி பெற முடியும். உறவினர்கள் அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தடைப்பட்டிருந்த பணம் இன்று கையில் வந்து சேரும். பணம் பல வழிகளிலும் இன்று செலவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். காரிய தாமதம் ஏற்படும், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லக்ஷ்மி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையை உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களை தொந்தரவு செய்யலாம். சூழ்நிலையை உணர்ந்து கொஞ்சம் செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று செயல்களில் கொஞ்சம் வேகம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கலாம்.
எதிர்ப்புகள் நீங்கும், தொழில் போட்டிகள் குறையும். வெளியில் பயணம் செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை போன்றவை இடமாற்றம் போன்றவை ஏற்படும். அலைச்சல்கள் கூட கொஞ்சம் இருக்கும். இன்று பெண்களின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். கையில் காசு புரளும் கவலை வேண்டாம். இன்று முடிந்தால் தெய்வீக நம்பிக்கை இருப்பது ரொம்ப அவசியம்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஏற்படும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்குத் திசை
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்