சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தொடர்ந்து ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா இது குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க உடனே இன்னொரு செய்தி வந்துவிடுகிறது. இன்று ஒரு செய்தி நாளை மற்றொரு செய்தி. இன்றைய செய்தி நாளைய செய்தி வந்தவுடன் மறந்துவிடுகிறது. நாளை வேறொரு செய்தி பரபரப்பாக இருக்கிறது. இந்த புரிதல் எனக்கு வந்தவுடன் நான் இது குறித்து கவலைப் படுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.