மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தடைப்பட்டுவந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலனையே கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள், அது போதும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். அதாவது லாபத்திற்கு எந்த வித குறையும் இல்லை. உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
நல்ல முன்னேற்றமான சூழலும் இருக்கும். இன்று வீடு வாங்கக் கூடிய, சொத்து வாங்க கூடிய நல்ல சூழ்நிலையும் இருக்கு. கூடுமானவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாகனம் வாங்க கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் கணவன் மனைவிக்கிடையே இன்று அன்பு இருக்கும் இன்று காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கு. காதலர்களுக்கு இன்று அன்னோன்யம் கூடுதலாக இருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இருக்கு. உத்தியோகத்தில் நல்ல உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடும்.
அதுபோலவே உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான சூழலும் இன்று இருக்கு. மாணவர்கள் கல்வியில் சிறப்பான அந்தஸ்தை பெற முடியும். கல்வியில் இருந்த தடைகள் விலகி, இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் சீண்டிப் பார்க்க கூடும், அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் மோதலும் இல்லாமல் நடந்து கொள்வது சிறப்பு. இன்று உங்களுக்கு ஓரளவு பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் கூட சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வயிற்றில் உப்புசம் போன்ற சில விஷயங்கள் ஏற்படக்கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
அதுபோலவே குடும்பத்தாரிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். காதலர்கள் இன்று எந்தவிதமான வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இன்று நன்றாக இருக்கு. உத்யோகம் செல்பவர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முடிந்தால் இன்று ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மிக நன்றாக இருக்கும். அதுபோலவே கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வழியே சென்று உதவிகளை செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும்.
இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றியும் இருக்கும். மனம் உற்சாகமாக காணப்படும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
மிதுன ராசி அன்பர்களே….!! இன்று வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து, மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு இடையூறுகள் வந்து சேரும் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அதேபோல வாடிக்கையாளரிடம் பேசும்பொழுதும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர், மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளை கொஞ்சம் ஏற்க வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
சரியான நேரத்திற்குள் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று ஆதாயம் கிடைப்பதற்காக அலைய வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்கள் பேசும் பொழுது எந்தவித வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் பேசுவது நல்லது. கூடுமானவரை இன்று பொறுமையை கையாண்டால் அனைத்துக் காரியமும் மிதுனராசிக்காரர்களுக்கு நல்லபடியாக முடியும். இன்று கணவன் மனைவிக்கிடையே ஓரளவு அன்பு இருக்கும். அதே போல மனைவியிடம் கொஞ்சம் ரொம்ப அன்பாக நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது கூட நிதானமாகப் பேசுங்கள்.
யாரிடமும் இன்று நீங்கள் முக்கியமாக வாக்குவாதங்களை செய்யாமலிருப்பது நல்லது. இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
கடக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். வீண் அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை செலவு செய்யும் பொழுது கொஞ்சம் நிதானமாக செலவு செய்யுங்கள். வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை, இருந்தாலும் மனம் கொஞ்சம் அலைபாய கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்று அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்களை சந்திக்கக்கூடும். அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைத்து குடும்பத்தாரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று கடன்கள் மட்டும் தயவு செய்து வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் கூடுமானவரை இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதாவது ரகசியங்களை கூடுமான வரை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ரொம்ப கவனமாக செயல்படுங்கள். உடல்நிலையை பொருத்தவரை உங்களுக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஓரளவு சிறப்பான சூழ்நிலையே நீடிக்கும். ஆனால் சரியான உணவுகளையும் நல்ல தரமான உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவியை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை.
சுகபோக வாழ்வு அமையும். அதே போல அக்கம்பக்கத்தினர் இடம் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் சுமுகமான நிலையே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : மேற்கு
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். ஆதாயம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய மைல்கல்லை இன்று நீங்கள் அடைவீர்கள். வாடிக்கையாளரிடம் ரொம்ப கனிவாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆதரவும் இருக்கும். இன்று லாபத்துக்கும், தனவரவு இருக்கும் எந்தவித குறைவும் இருக்காது. புதிய முயற்சிகள் நல்லபடியாகவே இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதலர்களால் நல்ல மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய இனிமையான சூழல் அமையக் கூடும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் சிறப்பாக செய்து நல்ல முன்னேற்றத்தையும் பாராட்டுகளையும் பெறக்கூடும். அதேபோல மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மனம் மகிழ கூடிய சூழல் இருக்கு. முடிந்தால் இன்று நீங்கள் ஆலய மட்டும் சென்று வாருங்கள், அது போதும். மனம் ரொம்ப அமைதியாகவும் நிம்மதியாகவும் காணப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு நீடிக்கும்.அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று எல்லா விஷயத்திலும் சிம்மராசிக்காரர்களுக்கு சிறப்பாகவே இருக்கு.
இன்று மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் அது போதும். ஆனால் படிப்பதை பற்றிய கவலைகள் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். முன்னேற்றமான சூழ்நிலை அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும். காரியத்தில் உள்ள வெற்றி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி ஏற்படும். அனைத்து விஷயங்களிலுமே ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இன்று எதிர்பாராத செலவுகள் இருக்கும். ஆனால் வரவும் இருக்கும். வரவு இருந்தாலும் செலவு செய்யும் பொழுது கவனமாக செய்யுங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். அரசியல் துறையினர் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடமும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் பெற்றுக் கொடுக் காதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அதுபோலவே பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீர்கள். அதாவது நீங்கள் பொறுப்பேற்று பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீர்கள். இன்று ஓரளவு எல்லா வகையிலும் உங்களுக்கு சின்னதாக நன்மை நடக்கும்.
மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடும் அதை பார்த்துக் கொள்ளுங்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரிடும். இன்று பால்ய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. அதாவது பள்ளிப் பருவத்தில் படித்த நண்பர்களை சந்திக்க கூடிய சூழல் இருக்கு. அதன் மூலம் உங்களுடைய மனம் மகிழும். கூடுமானவரை இன்று ஆலயம் சென்று வாருங்கள். அனைத்து விஷயங்களிலும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை நல்லபடியாகவே இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக இருப்பீர்கள். மனைவியிடமும் அன்பாக இருப்பீர்கள். இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்றைய நாள் சிறப்பாகவே இருக்கும். தாராள செலவு மட்டும் இருக்கும்.
அதை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்தி விட்டால் இன்றைய நாள் ரொம்ப நன்றான நாளாகவே இருக்கும். தொழிலில் வாடிக்கையாளரிடம் கொஞ்சம் பேசும்பொழுது ரொம்ப அன்பாக பேசுங்கள். அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் அன்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மன அமைதி பெறும். அதாவது உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தீர்வு கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் உங்களை பாராட்ட கூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அன்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எந்தவித கவலையும் வேண்டாம். ஆனால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உழைப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வரவு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.
தொழில் புரிபவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து செயல்படுங்கள். அதாவது வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று தொழில் ரீதியாக நீங்கள் பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பயணம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று ஆதாயம் கிடைப்பது கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும் .இருந்தாலும் சரியான நேரத்தில் வந்து சேரும். மகிழ்ச்சியாகவே இருக்கும். புதிய தெம்பும் உருவாகும். அதுமட்டுமில்லாமல் புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வருவதால் வாய்ப்புகள் இருக்கு.
கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருக்கெடுத்து ஓடும் . பிள்ளைகளிடம் நீங்கள் ரொம்ப அன்பாக நடந்து கொள்வீர்கள். அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் பலப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சகோதரர் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். இன்று வெளியூர் பயணத்தின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று பூமி தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இழுபறியான சூழ்நிலை இருக்கும். மனத் தெம்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. தொழிலுக்காக நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க கூடியதாக இருக்கும். அதனால் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடத்திலிருந்து பண வரவு கிடைக்கும். கூடுமானவரை கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப பொறுமையாக செயல்பட வேண்டும்.
அதே போல பயணத்தில் செல்லும்பொழுது உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள். அலட்சியம் வேண்டாம். அலட்சியம் மட்டும் இருந்து விட்டால் மிகப்பெரிய அளவில் இழப்பு நேரிடும். புரிந்துகொண்டு செயல்படுங்கள் அது போதும். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப நிதானமாக செல்லுங்கள். மனதை கூடுமானவரை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். உங்களுக்கு மனம் அமைதியாக காணப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் வரக்கூடும். ஆகையால் அவர்களிடம் பேசும் போது ரொம்ப நிதானமாகப் பேசுங்கள். கூடுமானவரை பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள் அது போதும் .இன்று காதலில் உள்ளவர்களுக்கு வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள்.
அதாவது காதலர்கள் வாக்குவாதங்கள் செய்யாமல் அன்பாகப் பேசிக் கொள்வது ரொம்ப நல்லது. இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும். இன்று மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை எப்பொழுதுமே நாங்கள் சொல்வதைப் போலவே எழுதிப் பாருங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய வாக்குவாதத்தை மட்டும் நீங்கள் தயவுசெய்து குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களுமே படு சூப்பராக இருக்கும். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு எடுக்கக் கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். கூடுதலான உழைப்பு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். சக மனிதரிடம் நீங்கள் பேசும்போது அனுசரித்துச் செல்லுங்கள். கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். இன்று தன வரவு கிடைப்பதை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற வரின் ஆதரவு கிடைக்கும் அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக நீங்கள் செய்யவேண்டும். கூடுமானவரை உதவிகள் செய்யும் பொழுது சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கும். அதை யோசித்து நிதானமாக செய்யுங்கள். வாகனத்தில் செல்லும்போது கூட ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று மிக முக்கியமாக வெளிவட்டாரத் தொடர்புகள் உங்களுக்கு விரிவடையும். தொழிலுக்கு ரொம்ப முக்கியம் வெளிவட்டாரத் தொடர்பு தான். அது உங்களுக்கு விரிவடைவதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க கூடும். இன்று பங்குச்சந்தையில் வெற்றிகரமான வாய்ப்புகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும்.
ஏற்றுமதி துறை சார்ந்தவர்கள் கூட நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும். இருந்தாலும் யாரிடமும் கோபப்படாமல் பேசுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் போலவே இருக்கும். சக மாணவர்கள் மட்டும் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெளியூறு தகவல்கள் சாதகமான தகவல்களாக உங்களுக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் ரொம்ப வேகமாக நடைபெறும். தடைகள் விலகி செல்லும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சகோதரர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரவு சிறப்பாக இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் அதை நீங்கள் தாராளமாக செலவு செய்து விடுவீர்கள். கூடுமானவரை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று தொழிலாளர்களால் உங்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய இடத்திற்கு தொழிலை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் போன்றவை ஏற்படும். இன்று வீடு சொத்துக்கள் வாங்கக் கூடிய சூழலும் இருக்கும். வீடு மாற்றங்கள் செய்யக்கூடிய சூழ்நிலையும் இன்று இருக்கும். இன்று அனைவரின் ஆதரவும் உங்களுக்கு பெருகும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ரொம்ப சிறப்பாக நடக்கும். பண பரிவர்த்தனையில் மட்டும் எப்பொழுதுமே சரி மகர ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடைய பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் இழப்பு. மிகப்பெரிய அளவில் திருஷ்டி ஏற்படுத்திவிடும். பார்த்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். காதலர்களுக்கு இன்று அன்னியோன்யம் அதிகரிக்கும். இன்று திருமண முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தடைகள் விலகி செல்லும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவிகள் இருக்கும். உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களுடைய வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்று பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றி சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. குடும்பத்தைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்று அனைவரின் ஆதரவால் முக்கியமான பணியும் நிறைவேற்றுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். எடுக்கக் கூடிய விஷயங்கள் அனைத்தும் திறமையாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துமே சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தாரிடம் நீங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். உங்களுடைய மனைவி மீது நீங்கள் அளவற்ற அன்பு வைத்து இருப்பீர்கள். அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் நேர்த்தியான சூழல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளர் இடம் பேசும்போது மட்டும் நிதானமாக கடைபிடியுங்கள். இன்று கோபம் கொஞ்சம் தலை தூக்கினாலும் அன்பிற்கு எந்த குறையும் இருக்காது. கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பு இருக்கும் என்று சொல்வார்கள். அது போல தான் நீங்களும். மற்றபடி இன்று எந்த பிரச்சினையும் உங்களுக்கு இல்லை.
தன வரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆனால் ஆதாரத்துடன் தான் அது வந்து சேரும். அதற்கேற்றார்போல் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. உடல்நலம் ரொம்ப சிறப்பாக உள்ளது. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பு. இப்போதைக்கு புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு கொஞ்சம் முன்னேற்றமான சூழலில் வாழ்வது சிறப்பு. உங்களுக்கான நேரம் வரும்போது அதை விரிவுபடுத்தி கொள்வது ரொம்ப நல்லது. அதுபோலவே வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் நிதானமாகவும் பொறுமையாகவும் அலட்சியம் இல்லாமல் எதையும் செய்யுங்கள். வெளியூர் பயணத்தின்போது உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள்.
\பயணங்கள் செல்லும்போது பேருந்தில் தூங்காமல் செல்வது ரொம்ப சிறப்பு. இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் அது போதும். இன்று மிக முக்கியமாக சக நண்பரிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு கூட சிறு சிறு பிரச்னைகள் வரக்கூடும். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம்கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடங்களை படிப்பது நல்லது. படித்த பாடத்தை நாங்கள் சொல்வது போலவே எழுதி பார்ப்பது மிகவும் சிறப்பு. இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்