மேஷம்
மேஷ ராசி அன்பர்களே..!!!
இன்று உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். இன்று வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கும்.
எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும் . மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உருவாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பற்றிய பதவி உயர்வு பற்றிய தகவல்கள் வந்து சேரும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே…!!!
இன்று எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடுவீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் இருக்கும். எந்த ஒரு தொழிலும் தெளிவாக செய்வது ரொம்ப சிறப்பு . முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதே போல மனமும் இன்று தெளிவாக தான் இருக்கும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும், அவசர முடிவுகளை எப்போதுமே தவிருங்கள். பணம் வரும் வாய்ப்பு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடைய கூடும். சேமிப்பு இன்று கூடுதலாகவே இருக்கும் . இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பு வாய்ந்த தருணம் ஏற்படும் .
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று பொது பிரச்சினையில் எந்தவித கருத்துக்களையும் சொல்லாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைய கூடுதலாக பணிபுரிவீர்கள். புதிய இனங்களில் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள், குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கப்பூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள்.
மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும், வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் இன்று வசூல் ஆகும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சியாக தான் இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும் . திருமண முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும்.
இன்று முக்கிய பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்குமே. அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை மற்றும் இளம் மஞ்சள்
கடகம்
கடக ராசி அன்பர்களே…!!!
இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சிகளை பெறுவார்கள், விளையாட்டு துறையில் வெற்றி கொள்வார்கள். எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், உழைப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையும் கூடுதல் உழைப்பின் மூலம் தான் செய்து முடிக்க வேண்டியிருக்கும். மனம் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஊதா
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுடைய செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழிலில் வியாபார வளர்ச்சி ஏற்படும். சீரான முன்னேற்றம் இருக்கும். கூடுதலாக பண வரவு கிடைக்கும். ஊட்டச் சத்தான உணவுகளை உண்டு மகிழுங்கள். இன்று செல்வம் சேரும், வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மனதைரியம் கூடும், எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும் . அந்நிய நபரிடம் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. உங்களைப் பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் கொஞ்சம் ஒதுங்கி விடுவது நல்லது. இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின் ஆதரவு இருக்கும், ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
கன்னி
கன்னி ராசி அன்பர்களே….
இன்று உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்,. புத்திரர் விரும்பிய பொருளை வாங்கி கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
கணவன் மனைவி அனுசரித்து எதையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையும் மனத்திருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றியும் ஏற்படும். பணவரவு இன்று தாராளமாகவே இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். திருமண முயற்சிகள், காதலில் வெற்றி போன்றவை ஏற்படக்கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சிறப்பான முன்னேற்றத்தை அடையக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம்பச்சை நிறம்
துலாம்
துலாம் ராசி அன்பர்களே…..
இன்று யதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். புதிய இடங்களில் செலவு ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை உடல் நலத்திற்கு உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான கடின போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் விரிவுபடுத்துதல் தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.
குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான துணிகள் போன்றவற்றை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். இன்று பொன் பொருள் சேரும். இன்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்து காரியங்களை மேற்கொள்ளுங்கள், முடிந்தால் பெரியோர்களிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நல்ல முன்னேற்றங்களிருக்கும். மேற்கல்வியில் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். விளையாட்டு துறையிலும் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.
இன்று மிக முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே….
இன்று சுய அந்தஸ்து காப்பதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். உற்பத்தி விற்பனை சீராக வளரும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் லேசாகும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் கவனமும் அனுசரணையும் இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பொழுது கவனமாக அனுப்புங்கள். மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தயவுசெய்து ஓரம் கட்டி விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு
தனுசு ராசி அன்பர்கள்…
இன்று புதிய நம்பிக்கை ஏற்படும் நாளாக இருக்கும். மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பணவரவு கிடைக்கும், வழக்கு விவகாரத்தில் அனுகூலம் வளரும், இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். உஷ்ணம் சம்பந்தமான நோய் வரக்கூடும். அடுத்தவரைப் பார்த்து எதையும் செய்ய தோன்றலாம், அதனை விட்டு விடுவது ரொம்ப நல்லது.
இனிய காரியம் கைகூடும் வீண் அலைச்சல் குறையும். சிக்கலான பிரச்சினையும் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும், எதைப் பற்றியும் சிந்திக்காமல் நீங்கள் உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி காரியத்தில் ஈடுபடுங்கள் அது போதும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று நீங்கள் மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்
மகரம்
மகரம் ராசி அன்பர்கள்…
பிறருக்கு உதவுவதால் மறைமுக சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். பணியில் சுறுசுறுப்பு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண்கள் பெற எண்ணுவார்கள், அதற்கான முயற்சியில் வெற்றியும் பெறுவார்கள்.
காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது மட்டும் நல்லது. எதிலும் கவனமாக இருங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவார்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். எதிர்பாராத நன்மைகளும் கிடைக்கும், உடலில் வசீகரத் தன்மை கூடும், திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
கும்பம்
கும்ப ராசி அன்பர்கள்…
சிறிய முயற்சி அதிக வெற்றியை கொடுக்கும். விலகி சென்ற நண்பர்கள் வந்து இணைவார்கள், அன்பு பாராட்டுவார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூடும். இன்று எதிர்ப்புகள் விலகிச்செல்லும். தொல்லைகள் தீரும். வீண் கவலைகள் மறையும். கோபத்தை கட்டுபடுத்துவது மட்டும் எப்பொழுதும் நல்லது.
பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். வீண் ஆசைகள் கொஞ்சம் ஏற்படலாம், கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும், அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை கொடுக்கும். பிள்ளைகளிடம் தயவுசெய்து கோபத்தைக் காட்டாமல் அன்பாக பேசுவது ரொம்ப நல்லது. இன்று மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனமான போக்கு காணப்பட்டாலும் இறுதியில் வெற்றியே மிஞ்சும். விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் காவி நிறம்
மீனம்
மீனம் ராசி அன்பர்கள்…
இன்று சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் தொழில் வியாபார வளர்ச்சிக்கு அதிகமாக பணிபுரிவது அவசியம். வரவை விட செலவு அதிகரிக்கும், வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று உறவினர் நண்பர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
எதிர்பார்த்த சரக்குகள் வருவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகிச்செல்லும். வியாபாரம் தொடர்பான பிரச்சனையை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள்.
இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கும் பொழுது கொஞ்சம் ஆலோசனை செய்தும் தீவிரமாக சிந்தனை செய்தும் எடுப்பது மிகவும் நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள், விளையாட்டு துறையிலும் வெற்றி பெறுவார்கள்.
இன்று முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் நீல நிறம்.