மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சு வார்த்தை ஏதும் காட்டாமல் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது.
லாபம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறையலாம் கவலை வேண்டாம், அனைத்துமே சரியாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமையலாம் பார்த்துக் கொள்ளுங்கள். அனுசரித்துச் செல்லுங்கள். கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் பேசுங்கள்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக செய்வதற்கு கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் . அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். பக்கபலமாக விளங்கும் நண்பர்களால் பணியிலிருக்கும் தொய்வு அகலும். நிச்சயம் காரியம் நிச்சயத்தபடி நடைபெறும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை நாடி வரக்கூடும். இன்று எந்த ஒரு முயற்சியிலும் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும் பார்த்துக் கொள்ளுங்கள். மன கவலை ஏற்படலாம்.
இன்று அதிகமாக கவலை இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். ஆகையால் எதை பற்றியும் கவலை வேண்டாம். காரியங்களை மட்டும் நீங்கள் செய்து கொண்டே இருங்கள். தடையை தாண்டி தான் இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். மன பலம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.
இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் இருக்கும். கூடுமானவரை பெரியதாக ஏதும் பிரச்சினை பள்ளிக்கு வர வேண்டாம் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ‘சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் நீல நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மீக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாலை நேரம் மகிழ்ச்சிக்குரிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கிய சரக்குகள் விற்பனை ஆகும்.
லாபம் பன்மடங்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். இன்று புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட கொஞ்சம் தாமதப்பட்டு தான் முடியும். ஆனால் எந்தவித பிரச்சினையும் இல்லை.
எல்லாமே இன்று சிறப்பாகத்தான் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளுமபோது் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியஅளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகள் இன்று உங்களை சந்திக்க கூடும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுப விரயங்கள் அதிகரிக்கும் .வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் கடின முயற்சியின் பேரில் தான் வெற்றி பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகஜமான நிலை காணப்படும். சுமுக உறவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் இருக்கும்.
ஆனால் கடன்கள் மட்டும் நீங்கள் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் உண்டாகும். இன்று அனைத்து விஷயங்களுமே ரொம்ப சிறப்பாக இருக்கும். ஆனால் செலவு மட்டும் கொஞ்சம் கூடும். இன்று முன்னேற வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். அனைத்து விஷயமுமே உங்களுக்கு சாதகமாக அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சேர்த்து வழிபடுங்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இன்று : உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை :
மேற்கு : திர்ஷ்ட எண் 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கன்னிராசி அன்பர்களே…!! இன்று சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாளாக இருக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று பிரயாணத்தில் தடைகள் ஏற்பட்டு திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் கொஞ்சம் இழுபறியான சூழலில் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்கள் யாரிடம் செய்யாதீர்கள்.
எந்த காரியத்தையும் கடின பிரயாசத்திற்குப் பிறகு செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் ஓரளவு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் செய்வதற்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாகும். அது மட்டுமில்லாமல் சூரிய வழிபாட்டை செய்து இன்றைய நாள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும். இடமாற்றம் இனிமையைக் கொடுக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு காரியத்தடையால் மனக்குழப்பம், டென்சன் போன்றவை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும் நாளாக இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று குடும்பத்தில் நிம்மதி காணப்படும். காரிய அனுகூலம் ஏற்படும். மனக் கவலை கொஞ்சம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் ஏற்படும்.
உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் கூட வரலாம் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். வயிறு தொடர்பான நோய்கள் கொஞ்சம் ஏற்படலாம். பணவரவு இருக்கும் .பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சுநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அதிகாலையிலேயே அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நன்மையை கொடுக்கும். வீடு கட்டும் சிந்தனை அதிகரிக்கும். திருமண தடை அகலும். இன்று வீண் அலைச்சல், தடை தாமதம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகி செல்லும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பயணம் மூலம் நன்மை கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படும். உங்களுடைய கோபமான பேச்சை தவிர்த்து அமைதியாக எதையும் எடுத்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது ரொம்ப தீர ஆலோசித்த பின் எடுப்பது நல்லது. முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
அனைத்துமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நேற்றைய பிரச்சனை நல்ல முடிவுக்கு வரக்கூடும். உயர் அதிகாரிகளின் உதவகள் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். புத்தி சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றியும் பெறுவார்கள்.
வாகனயோகம் இருக்கும். ஆனால் நீங்கள் வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்ல வேண்டும். செய்யும் காரியங்களால் வறுமை ஏற்படும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். இன்று செலவு கொஞ்சம் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை கடன்கள் மட்டும் யாரிடமும் வாங்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன் என்று எந்த பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
இதனை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டாலே ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாக இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனகுழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். உங்களுடைய உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள்.
அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏதும் செல்லாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. உடல் ஆய்வாகவே இன்று காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும். எதிர்கால நலன்கருதி சேமிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. வரவு திருப்திகரமாக இருக்கும். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு நாட்டம் செல்லும். அனைத்து விஷயமுமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். ஆர்வமுடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல் காரியத்தடை தாமதம் மட்டும் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும். அதைப்பற்றியெல்லாம் எந்தவித கவலை வேண்டாம். நல்ல பெயரும் புகழும் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். எடுக்க கூடிய பொருட்களை நீங்கள் கவனமாக எடுக்க வேண்டும். அதுவும் உயர் வகையான பொருட்களாக இருந்தால் ரொம்ப கவனத்துடன் நீங்கள் எடுக்க வேண்டும். அடுத்தவருடன் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் எந்த ஒரு வாக்கு வாதங்களும் வேண்டாம். கூடுமானவரை அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவிநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் வெள்ளை நிறம்