இன்று பெரம்பலூர், நாமக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 27,537 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 83 கொரோனா மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 45 அரசு பரிசோதனை மையங்களும், 38 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்படுகிறது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு கீழ் 2,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 45,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.