தலைமைச் செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உள்ளது.
மேலும் நேற்று மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,047 பேராக உள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலவரங்களை கருத்தில் கொண்டு இன்று பிற்பகல் 3 மணி அளவில் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கும் முடிவடைவு இவைகளைக் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.