Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், தென் தமிழக கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11:30 மணி வரை 3.5 மீட்டர் உயரம் முதல் 3.7 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்ப வாய்ப்பு இருப்பதாகவும்  வானிலை மையம் கூறியுள்ளது.

Categories

Tech |