Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… களைகட்டும் கடைகள்… குவியும் மக்கள்…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் கடைகளில் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர் .

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சந்தைகளில், கடைகளில், வீட்டில் வைப்பதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அவல், பொரி, கடலை என விநாயகருக்கு படைக்கும் படைப்பு பொருள்களையும் வாங்கி சென்றதால் வியாபாரம் மிகவும் ஆரவாரத்துடன் நடக்கிறது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட்களிலும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை – தாம்பரம், பல்லாவரம் மார்க்கெட்டுகளிலும் திருவள்ளூரில் உள்ள கடைகளிலும் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஏராளமான விநாயகர் சிலை மற்றும் கரும்பு, அருகம்புல் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தென்குளக்கரை மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்ல பொதுமக்கள் இரவிலும் ஆர்வமாக வந்து சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை கடைவீதிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 50 ரூபாய் மற்றும், வண்ணம் பூசிய அழகான சிலைகள் 100 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |