Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தொடர் தோல்வியின் எதிரொலி’…. முன்னாள் கேப்டனை அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்…!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள்  கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஒபெட் மெக்காய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக முன்னாள் டெஸ்ட் அணியின் கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 55 ரன்கள் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ,அடுத்த இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது.

Categories

Tech |