புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்தலவாடி கிராமத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அத்தலவாடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரேஷ் பாபு என்பவருடைய பெட்டிக்கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, அவரது கடையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக சுந்தரேஷ் பாபுவை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.