சர்வதேச புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான எஸ். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கடந்த 2 வருடங்களாக காலண்டர் வெளியிட்டு வருகிறார். இந்த காலண்டர் ஹியூமன் மற்றும் கலைஞர் என்ற தலைப்பில் 2 வருடங்களாக வெளியிடப்படும் நிலையில், தற்போது தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் 2023-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஓவியர், சிற்பி, கிராஃப்டி ஆர்டிஸ்ட் என்ற பரிணாமங்களில் புகைப்படம் எடுத்து அதை காலண்டராக எஸ். ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார்.
இதற்காக 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் 10 நாட்களாக 12 வித்தியாசமான செட்டுகளை அமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த காலண்டரானது சர்வதேச தரத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் 2 புகைப்படங்கள் என 24 புகைப்படங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் தற்போது விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அமேசான் போன்ற பல முன்னணி இணையதளங்களில் கிடைக்கும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.