விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்து பொதுமக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் நோயின் தாக்கம் அறியாமல் தேவையின்றி வெளியே வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா தலைமையில் சாலையில் தேவையின்றி வருபவர்களிடம் நோய் தொற்று குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் கூறியுள்ளார். மேலும் அத்தியாவசியமின்றி வெளியே வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். அப்போதும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மற்றும் இதர காவலர்கள் உடனிருந்துள்ளனர்.