டாஸ்மாக் கடையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கதவுகளை எளிதில் உடைக்க முடியாத வகையில் வெல்டிங் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முழு ஊரடங்கு சமயத்தில் மக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதை பயன்படுத்திக் கொண்ட சிலர் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கதவை எளிதில் உடைக்க முடியாத வகையில் வெல்டிங் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மர்ம நபர்கள் எளிதில் பூட்டை உடைத்து திருடுவது தடுக்கப்படும்.