ஆடி அம்மவசை அன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கமலாலயம் குளத்தின் கதவுகளை நிர்வாகிகள் அடைத்துள்ளனர்.
கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆடி அம்மாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் கோவிலில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மட்டும் கோவில்களுக்குள் சென்று பூஜை செய்துகொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கமலாலயம் குளத்தில் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கான தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கமலாலயம் குளத்திற்கு செல்வதற்கான வழிகளை அடைத்துள்ளனர். மேலும்கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.