Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வரை சந்திக்க… MLAவுக்கு அனுமதி மறுப்பு…. என்ன நடக்குது அதிமுகவில் ?

திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக வந்தவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்க பின்னால் திருச்சி விமான நிலையத்திற்கு, சென்னை செல்வதற்காக வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் முதல்வர் இருக்கும் போது, அவரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கனகசபாபதியும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டதாக தெரிகின்றது. அப்போது அவரை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை. இதனால் காத்திருந்த அவர் விரைவில் இதுகுறித்து முதல்வரிடம் பேசுவேன், விரைவில் பல கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

Categories

Tech |