Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கட்டையாக இருக்கும் குழந்தைகள்…. உயரமாக வளர இதை செய்ய சொல்லுங்க…!!

குழந்தைகள் உயரமாக வளர செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பு 

குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் எனும் ஆசை அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் ஒன்று. குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோர்களைப் பொறுத்தே அமையும் ஆண் குழந்தை தந்தை உயரத்தை பொருத்தும், பெண் குழந்தைகள் தாயின் உயரத்தை பொருத்தும் வளர்வார்கள். ஆனால் சில பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க முடியும். அவை

  • குழந்தைகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் முழுவதும் நன்றாக விரிவடையும்  இது குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கு உதவும்.
  • குழந்தைகள் கீழே படுத்து இடுப்பை மட்டும் உயர்த்தி 30 வினாடிகள் அதே நிலையில் இருக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் உயரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  • குழந்தைகளை தினமும் ஸ்கிப்பிங் போட சொல்வது நல்லது இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு உயரத்தையும் அதிகரிக்கும்.
  • குழந்தைகள் தரையில் படுத்துக்கொண்டு கால்களை மேலே உயர்த்த வேண்டும். இதன் மூலம் கால் பகுதியும் இடுப்பு பகுதியும் நன்றாக ஸ்ட்ரெச் செய்யும். கடினமான பயிற்சியாக இருந்தாலும் தொடர்ந்து செய்துவந்தால் பழக்கப்பட்டு விடும். குழந்தைகளும் உயரமாக வளருவார்கள்

Categories

Tech |