Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக… தடுப்பூசி போட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன்…!!

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் திருச்சியில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

முன் களப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். மக்கள் பின் விளைவுகள் குறித்து அச்சப்பட்டு தடுப்பூசி போட முன்வர தயங்குவதால் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தானே செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |