Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள தழும்புகள் மறைய…. இதை செய்து பாருங்கள்…

காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வீட்டு மருத்துவம்.

தேவையான பொருட்கள்

கசகசா                             –  ஒரு ஸ்பூன்

வேப்பிலை                    –  10

கஸ்தூரி மஞ்சள்        –  ஒரு ஸ்பூன்

பால்                                   –  2 ஸ்பூன்

 

செய்முறை

கசகசாவை  அரைக்க மிகவும் கடினமாக இருக்கும் அதனால் அதனுடன் 2 ஸ்பூன் பச்சை பாலை சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

உரலை எடுத்துக் கொள்ளவும் அதனால் தான் அனைத்தையும் சேர்த்து மையாக அறைக்கமுடியும்.

நன்றாக மையாக அரைத்து விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 

உபயோகப்படுத்தும் முறை 

அரைத்து இந்தக் கலவையை அரைத்த உடனேயே உபயோகப்படுத்தவும் அப்போதுதான் அதில் உள்ள மருத்துவ குணங்கள் கிடைக்கப்பெறும்.

தழும்பு இருக்கும் இடத்தில் இந்த கலவையை கட்டியாக போடவும்.

தூங்குவதற்கு முன்பு இதனை போட்டு விட்டு மறுநாள் காலை வரை இதை விடவும்.

அது முடியாதவர்கள் ஒரு மணி நேரத்திற்கு இந்த கலவையை தளும்பின் மேல் வைத்திருக்க வேண்டும்.

இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கக்கூடாது தினமும் புதிதாய் செய்து பயன்படுத்தவும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் தழும்புகள் கூடிய விரைவில் காணாமல் போகும்.

 

Categories

Tech |