Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

21 நாள் வீட்டில்… உடல் எடை கட்டுப்பாடு… இதை கவனியுங்கள்…!!

வீட்டில் இருந்தபடியே உடல் எடை குறைப்பது பற்றிய தொகுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபட்டு உள்ளனர். இதனால் ஒரே இடத்தில் இருந்து எடை கூடி விடுவோமோ என்னும் அச்சம் பலரது மனதில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அதற்கான தீர்வு

  • உணவில் அதிகம் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் எந்த விதமான வயிற்றுக் கோளாறும் ஏற்படாது. காரணம் கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  • மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை சேர்த்து உண்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கலவை உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுத்தன்மையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாக வைக்க சிறந்த வழியாகும். காய்கறிகளை வேக வைத்து அதன் பின்னர் குழம்பில் சேர்ப்பதால் காய்கறிகளில் இருக்கும் சத்து முழுமையாக கிடைக்கப்பெறும்.
  • ஒரு ஸ்பூன் அளவு நெய்யை உணவில் சேர்த்து தாராளமாக உண்ணலாம். இதனால் உடலில் தங்கியிருக்கும் கெட்ட  கொழுப்புகள் வெளியேறிவிடும்.

Categories

Tech |