Categories
தேசிய செய்திகள்

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டம்… பயனாளிகளிடம் நிதி வசூல்..!!

ஜல் ஜீவன் திட்டப்பணிக்கு, நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாதால், பயனாளிகளின் பங்களிப்புடன் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மத்திய அரசின், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 2025க்குள் குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சிகள் தோறும், தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளின் விபரம், தேவையான புதிய குடிநீர் தொட்டி, போர்வெல் உள்ளிட்ட கட்டமைப்பு விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, ஒவ்வொரு கிராமகளிலும், மிகச்சிறிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி துவங்கபட்டுள்ளது. இதற்காகத் தேவையான இடங்களில் குடிநீர் தொட்டி, போர்வெல், கிணறு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்காகும் செலவின தொகையில், 10 சதவீத தொகையை, பயனாளிகளின் பங்கு தொகையாகப் பெற வேண்டும் என, அரசு வழிகாட்டியுள்ளது. அதன்படி, ஜல் ஜீவன் திட்டப் பயனாளிகளிடம், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில், குடிநீர் இணைப்புக்கான வைப்பு தொகையாக, 1,000 ரூபாய் பெறப்படுகிறது. எஞ்சிய தொகையில், பங்களிப்பு தொகையாக, 10 சதவீதம் வரவு வைக்கப்பட உள்ளது. எஞ்சிய தொகை, ஊராட்சி பொது நிதியில், வளர்ச்சி நிதி என்ற பெயரில், வரவு வைக்கப்பட உள்ளது.

Categories

Tech |