Categories
மாநில செய்திகள்

TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றுகள் குறைந்ததன்  காரணமாக  தமிழக அரசின் சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் அறிவித்து உள்ளனர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அடுத்தாக, TNPSC சார்பில் குரூப் 2, 2A தேர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாக, ஆசிரியர் தகுதி தேர்வுகளும், குரூப் 4 பதவிகளுக்கான தேர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் குரூப் 4 தேர்வில் உள்ள காலிப் பணியிடங்களையும் வெளியிட்டிருக்கிறது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற  அரசுப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வுகள் 2022 ஜூலை 24 அன்று நடத்தப்படும் என்று TNPSC சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் நடைபெறாமல் இருந்தது.https://www.tnpsc.gov.in/Home.aspx இந்த இணையதளத்துக்கு சென்று அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதைத் தொடர்ந்து விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, அப்ளை நவ் என்பதை கிளிக் செய்த பிறகு, தங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தவர் என்றால் தங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே வரவும். அதன் பின்னர் அங்கே விண்ணப்ப விவரங்கள் என்ற பிரிவு இருக்கும். அதில் மொத்தம் 10 படிநிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். விண்ணப்ப விவரங்கள், தகவல்தொடர்பு விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள் போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அனைத்து படிநிலைகளையும் பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பம் சமர்ப்பிக்க பட்டுவிடும். அதை பின்னர் பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தோ வைத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |