தமிழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தில் காலியாக இருந்த நான்கு பதவிகளுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நோயின் தாக்கம் குறைய ஆரம்பத்தில் இருந்து TNPSC தேர்வர்கள் தேர்வு குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.