தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து திருக்குறள் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.