Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு…. 50 காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான ஆட்சேர்ப்பு  முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் தகுதி பெறுவார்கள் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் வைத்து நடைபெற இருக்கிறது.

இதுபற்றி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கு தகுதியுள்ளவர்களுக்கு ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். தற்போது உதவி பொது வழக்கறிஞரான தேர்வுகள் மூலம் மொத்தம் 50 காலி பணியிடங்கள் தமிழ்நாடு பொது சேவையில் நிரப்பப்பட இருக்கிறது.

Categories

Tech |