டிஎன்பிசி தேர்வர்களுக்கு பிற்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பாக ஒருநாள் அறிமுக முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து கூட்டமைப்பு நிறுவனர் ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிசி தேர்வர்களுக்கு ஒருநாள் அறிமுக முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு ,https://sfrbc.com/tnpscregistration/என்ற இணையதளத்தில் பதிவு செய்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் அனைவருக்கும் முன்னாள் அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள், அலுவலர்கள், பயிற்சி நிபுணர்கள் ஒரு நாள் முகாமை நடத்துகிறார்கள்.
இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னை மனிதநேயமுகாமுடன் இணைந்து தொடர்ச்சியாக ஆன்லைன் மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் உலக கொங்கு மையமும் இதனுடன் இணைந்துள்ளது. வரும் 12ஆம் தேதி பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியிலும், 19ஆம் தேதி கோவை சுகுணா கல்யாண மண்டபத்திலும், 20ஆம் தேதி ஈரோடு கலை அறிவியல் கல்லூரியிலும் முகாம் நடக்கிறது. ஏப்ரல் 9ஆம் தேதி மதுரை சோலமலை பொறியியல் கல்லூரியிலும், ஏப்ரல் 10-ஆம் தேதி திருநெல்வேலி என்.ஜி.ஓ., ‘ஏ’ காலனி கூட்டுறவு சங்கத்திலும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.