Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தேர்வாணையம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் வருடத்திற்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் அது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதாவது குறைந்த காலியிடங்கள் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அடுத்த வருடம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அட்டவணை முதல் கட்ட தகவல்கள் மட்டும் தான்,கூடுதலான காலி பணியிடங்கள் பெறப்படும் போது அட்டவணையில் சேர்க்கப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது. ஒவ்வொரு வருடமும் கூடுதலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |